சுவையான சின்ன வெங்காய காரகுழம்பு ரெசிபி..!
சின்ன வெங்காயமானது நார்சத்து, ஆண்டி ஆக்ஸிடண்டுகள் போன்ற சத்துக்களை கொண்டுள்ளது. அன்றாடம் 150 கிராம் வரையிலான சின்ன வெங்காயத்தை எடுத்துக் கொண்டால் அது சருமம் மற்றும் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
சின்ன வெங்காய சாறு முடி வளர்ச்சிக்கும் உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்கவும் இது உதவியாக இருக்கும். இவ்வளவு நன்மை அளிக்கும் சின்ன வெங்காயத்தை வைத்து கார குழம்பு செய்யலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- இரண்டு டீஸ்பூன் அரிசி
- ஒரு டீஸ்பூன் எண்ணெய்
- அரை டீஸ்பூன் வெந்தயம்
- அரை டீஸ்பூன் மிளகு
- இரண்டு டீஸ்பூன் சீரகம்
- 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு
- இரண்டு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
- ஏழு டீஸ்பூன் கொத்தமல்லி விதை
- 10 வர மிளகாய்
- எண்ணெய்
- 20 சின்ன வெங்காயம்
- 15 பல் பூண்டு
- ரெண்டு தக்காளி
- கடுகு
- அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
- கருவேப்பிலை
- 15 பல் பூண்டு
- புளி
- 20 சின்ன வெங்காயம்
- வெல்லம்
- மூன்று வர மிளகாய்
- பெருங்காயத்தூள்
- மஞ்சள் தூள்
செய்முறை:
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் அரிசியை போட்டு மிதமான தீயில் வறுத்து தனியே வைக்க வேண்டும்.
- அதே வாணலில் சிறிது எண்ணெய் சேர்த்து அதில் வெந்தயம் சேர்த்து வறுத்து தனியே வைக்கவும்.
- பின் மிளகு, சீரகம் ஆகியவற்றை தனித்தனியே சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு, கொத்தமல்லி விதை ஆகியவற்றை தனித்தனியே சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அதே வாணலில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுத்து பின் ஆறவைக்க வேண்டும்.
- அதே வாணலில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கி பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி பின் ஆறவைக்க வேண்டும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் ஆறவைத்த பொருட்களையும் வறுத்த பொருட்களையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- புளியை ஊறவைத்து பின் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பின் நறுக்கிய வெங்காயம், பூண்டு பொன்னிறமாக கிளறி பின் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கிளற வேண்டும்.
- பிறகு அதில் தயாரித்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
- அரைத்து வைத்துள்ள மசாலாவையும் தண்ணீர் சிறிது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
- குழம்பில் எண்ணெய் பிரிந்து கெட்டியானதும் சிறிது வெல்லம் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் சின்ன வெங்காய காரகுழம்பு தயார்.
