கல்யாண வீட்டு வாழைக்காய் பொரியல்..!
வாழைக்காயில் நார்சத்து, தாதுக்கள், வைட்டமின் அதிகமாக உள்ளது. வாழைக்காயானது இதய ஆரோக்கியம், சர்க்கரை அளவை குறைத்தல் ஆகியவற்றை நிகழ்த்துகிறது.
இத்தகைய நன்மைகளை கொண்ட வாழைக்காயை வைத்து கல்யாண வீட்டில் செய்யும் பொரியலை போல சுவையான எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- இரண்டு வாழைக்காய்
- மஞ்சள் தூள்
- உப்பு
- எட்டு சின்ன வெங்காயம்
- எண்ணெய்
- இரண்டு பல் பூண்டு
- அரைக்க துருவிய தேங்காய்
- காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள்
- அரை டீஸ்பூன் சீரகம்
- கடுகு
- உளுத்தம் பருப்பு
- இரண்டு வரமிளகாய்
- கால் டீஸ்பூன் மிளகு
- உப்பு
- கருவேப்பிலை
செய்முறை:
- வாழைக்காயில் இருக்கும் கெட்டியான தோலை முதலில் நீக்க வேண்டும்.
- பின் அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நீரில் போட வேண்டும்.
- அந்த நீரில் சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வேக வைத்து பின் நீரினை வடிகட்ட வேண்டும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
- பின் துருவிய தேங்காய், சீரகம் சேர்த்து வதக்கி பின் மிளகாய்த்தூள் சேர்த்து கிளற வேண்டும்.
- வதக்கியவற்றை ஒரு தட்டில் சேர்த்து ஆற வைக்க வேண்டும். பின் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
- பின் வேகவைத்த வாழைக்காய் துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும்.
- இதில் அரைத்த மசாலா மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கிளற வேண்டும்.
- பின் தேவையான அளவு உப்பு சேர்த்து சில நிமிடங்களுக்கு வதக்க வேண்டும்.
- அவ்வளவுதான் கல்யாண வீட்டு வாழைக்காய் பொரியல் தயார்.