டேஸ்டியான வரகரிசி உப்மா ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
வரகரிசி – 1 கப்
நெய் – 3 மேசைக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 6 கீறியது
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
கறிவேப்பிலை சிறிது
கேரட் – 1 கப் நறுக்கியது
பீன்ஸ் – 1 கப் நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை
செய்முறை:
வரகரிசியை ஒரு கப் எடுத்துக் கொண்டு அதனை நீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பின் கழுவிய வரகரிசி மூழ்கும் வரை நீர் சேர்த்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து மூன்று ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நெய் சூடானதும் ஒரு ஸ்பூன் கடலை பருப்பு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின் நறுக்கிய ஒரு வெங்காயம், ஆறு பச்சை மிளகாய் கீறியது, இஞ்சி ஒரு துண்டு நறுக்கியது, சிறிது கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதில் நறுக்கிய கேரட், நறுக்கிய பீன்ஸ் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
அதற்கு பிறகு ஊறவைத்த வரகரிசி சேர்த்து ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து விட வேண்டும்.
குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை வேகவைத்து இறக்க வேண்டும்.
பின் குக்கரை திறந்து நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி கிளறி இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் டேஸ்டியான வரகரிசி உப்மா தயார்.