விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. கூம்பு வடிவ கொழுக்கட்டை..!
தேவையான பொருட்கள்:
- பச்சரிசி
- தேங்காய்
- வேர்க்கடலை
- முந்திரி
- பிஸ்தா
- பாதாம்
- உலர் கருப்பு திராட்சை
- நெய்
- உப்பு
- கிர்ணி விதை
- ஏலக்காய்
- பேரீட்சைபழம்
- கருப்பு எள்
செய்முறை:
பச்சரிசியை முதலில் நீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்த பின் நீரில் 2 மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
இரண்டு மணி நேரம் கழித்து ஒரு சுத்தமான காட்டன் துணியில் அரிசியை வடிகட்டி வைத்து அப்படியே கட்டி உலர விட வேண்டும். அது அப்படியே தண்ணீர் இருகட்டும்.
தண்ணீர் நன்றாக இருகிய பிறகு அரிசியை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து பின் சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் 2 ஸ்பூன் வேர்கடலை, 3 ஸ்பூன் பிஸ்தா, இரண்டு ஸ்பூன் பாதாம், நான்கு ஸ்பூன் முந்திரி, அரை ஸ்பூன் கருப்பு எள், இரண்டு ஸ்பூன் கிர்ணி விதை ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதே வாணலில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் துருவிய 3 ஸ்பூன் தேங்காய் சேர்த்து வறுக்க வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த நட்ஸ் மற்றும் தேங்காய், 3 ஸ்பூன் உலர் திராட்சை, ஏலக்காய் வாசனைக்கு, 10 பேரிச்சம் பழம், 3 ஸ்பூன் நாட்டு சர்க்கரை ஆகியவற்றை எல்லாம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் சிறிது நெய் சேர்த்து அதில் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து அரைத்து வைத்திருக்கும் மாவினை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும்.
இப்படி செய்தால் கொழுக்கட்டை வேகவைத்த பிறகும் நீண்ட நேரத்திற்கு மென்மையாக இருக்கும்.
முக்கோண வடிவில் உள்ள மோல்டில் மாவு மற்றும் ஸ்டஃப்பிங் சேர்த்து மூடவும், இப்போ முக்கோண வடிவ கொழுக்கட்டை தயார்.
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து இட்லி தட்டில் நெய் தடவி தாயாரித்த முக்கோண வடிவ கொழுக்கட்டைகளை வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுத்தால் கூம்பு வடிவ கொழுக்கட்டை தயார்.