இதெல்லாம் தெரிஞ்சிகோங்க..!
கறிவேப்பிலை காயாமல் இருக்க ஒரு அலுமினிய பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கலாம்.
பீட்ரூட், கேரட் அல்வா செய்யும்போது சிறிது பால் பவுடர் சேர்த்து செய்தால் சுவை அதிகமாக இருக்கும்.
தட்டை பயிறு, மொச்சை பயிறு, பாசிப்பயிறு ஆகியவற்றை சிறிது வறுத்து பின் வேகவைத்து சமைத்தால் சுவை அதிகமாக இருக்கும்.
அயிரை மீன் குழம்பில் தேங்காய் பாலை குழம்பு கொதிக்கும்போது ஊற்றி பின் மீன் சேர்த்தால் குழம்பு ருசியாக இருக்கும்.
தேங்காய் சட்னியில் பச்சை மிளகாயை லேசாக வதக்கி பின் அரைக்க சுவையாக இருக்கும்.
கேரட் தோல் நீக்கிய பின் 5 நிமிடங்களுக்கு நீரில் வைத்திருந்து பின் துருவினால் மிருதுவாக வரும்.
தக்காளி, புதினா ஆகியவற்றை அரைத்து பஜ்ஜி மாவில் சேர்த்து பஜ்ஜி செய்தால் சுவையாகவும் நல்லா மணமாகவும் இருக்கும்.
உருளைக்கிழங்கு, வாழைக்காய் ஆகியவற்றை சமைக்கும்போது அதில் பூண்டு மற்றும் சீரகம் போட்டு சமைக்க வாயு தொல்லை இருக்காது.
வீட்டில் ஈக்களின் தொல்லை அதிகமாக இருந்தால் புதினா இலைகளை கசக்கி போடலாம்.
மோர்குழம்பில் சிறிது சுக்குப்பொடி அரைத்து சேர்க்க சுவையாக இருக்கும்.
கொத்தமல்லி கீரையை ஈரமான துணியில் சுற்றி வைக்க சீக்கிரம் வாடாமல் இருக்கும்.