டேஸ்டியான இறால் ஃபிரை ரெசிபி..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
தேவையான பொருட்கள்:
- இறால் 400 கிராம்
- இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
- மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
- மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்
- சோள மாவு 4 ஸ்பூன்
- மைதா மாவு 2 ஸ்பூன்
- முட்டை 1
- சோடா மாவு சிட்டிகை
- கொத்தமல்லி இலை சிறிது
- உப்பு தேவையானது
- எண்ணெய் தேவையானது
செய்முறை:
- முதலில் இறாலை சுத்தம் செய்து நன்றாக நீரில் 4 முறையாவது அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- சுத்தம் செய்த இறாலில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு, சோளமாவு, மைதா மாவு, சோடா மாவு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அனைத்தையும் இறாலுடன் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
- பின் அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
- இறாலை அப்படியே அரை மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
- ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இறாலை சேர்த்து மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாக திருப்பிப்போட்டு வேகவைத்து எடுக்க வேண்டும்.
- கடைசியாக பொரித்த இறாலில் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி விடலாம்.
- அவ்வளவுதான் டேஸ்டியான இறால் ஃபிரை தயார்.
- இறாலை இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க அவ்ளோ ருசியாக இருக்கும். இறால் பிடிக்காதவங்க கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடித்துவிடுவார்கள்.
- குழந்தைகளுக்கு ஈவினிங்கில் ஸ்நாக்ஸாக கூட செய்து கொடுக்கலாம் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.