மீந்துபோன இடியாப்ப சோறு ரெசிபி..!
உங்க வீட்ல காலையில் செய்த இடியாப்பம் மீந்துபோனால் கவலை வேண்டாம். அந்த மீந்துபோன இடியாப்பத்தை வைத்து இரவில் ஒரு இடியாப்ப சோறு செய்து சாப்பிடலாம் ரொம்ப ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
- இடியாப்பம் 9
- முட்டை 3
- வெங்காயம் 100 கிராம்
- பச்சை மிளகாய் 1
- நுணுக்கிய மிளகு 1 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
- தேங்காய் பால் 100 மிலி
- கிராம்பு 2
- எண்ணெய் 2 ஸ்பூன்
- நெய் 3 ஸ்பூன்
- முந்திரி 8
- கொத்தமல்லி இலை சிறிது நறுக்கியது
செய்முறை:
- முந்திரிகளை பாதியாக உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- ஒரு அகலமான பாத்திரத்தில் தேங்காய் பாலை ஊற்றி வைக்கவும்.
- தேங்காய் பாலில் இடியாப்பத்தை போட்டு பின் பிய்ந்து எடுத்து தனியே வைக்கவும்.
- ஒரு நான் ஸ்டிக் ஃபேனை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கிராம்பு சேர்த்து பின் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மிளகு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- பின் முட்டை, கொத்தமல்லி இலை மற்றும் உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
- அதில் ஊறவைத்த இடியாப்பம், மீதம் உள்ள பால் சேர்த்து கிளறவும்.
- பின் நெய் சேர்த்து கிளறவும்.
- கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கலாம்.
- அவ்வளவுதான் இடியாப்ப சோறு தயார்.
