பசியை தூண்டும் பிரண்டை துவையல்..!
தேவையான பொருட்கள்:
பிரண்டை கைப்பிடி
இஞ்சி 1 துண்டு
காய்ந்த மிளகாய் 4
புளி எலுமிச்சை அளவு
உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன்
உப்பு தேவையானது
தாளிப்பதற்கு:
எண்ணெய்
கடுகு
செய்முறை:
ஒரு வாணலில் சிறிது எண்ணெய் விட்டு பிரண்டை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி தனியே வைக்க வேண்டும்.
பின் அதே வாணலில் உளுத்தம் பருப்பு,மிளகாய்,இஞ்சி,புளி,உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
ஒரு மிக்ஸியில் அனைத்தையும் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
தாளிப்பதற்கு ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து கடுகு போட்டு பொரிந்ததும் அரைத்த துவையல் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து கெட்டி ஆனதும் இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் பிரண்டை துவையல் தயார்.
