செந்தில் பாலாஜி ஊழல் வழக்கு..! நீதிபதி அதிரடி உத்தரவு..!!
அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது போக்குவரத்து துறையில் வேலைதாங்கி தருவதாகக் கூறி பணமோசடி வழக்கில் ஈடுபட்டார்.. அதன் பேரில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.. ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு போராடி வருகிறார்.
இன்று அந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கு விசாரணை நடைபெற்றது. அந்த வழக்கில் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படதற்கு பல எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாகரன், மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்கு விசாரணையையே தொடங்காத நிலையில் இதே வழக்கின் கீழ் அமலாக்கத்துறை எப்படி விசாரணையை தொடங்க முடியும் என கேள்வி எழுப்பினார். ஆகையால் உச்சநீதிமன்றத்தின் இறுதி உத்தரவு வரும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யக் கூடாது என விவாதிட்டார்.
ஆனால் அமலாக்கத்துறை தரப்பில், மத்திய குற்றப் பிரிவு வழக்குக்கும் அமலாக்கத்துறையின் இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என விவாதம் செய்துகொண்டனர். அப்போது செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகாதது குறித்து நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார். இதனால் குற்றச்சாட்டுகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் பதிவு செய்வது தொடர்பாக நீதிபதி அல்லி இருதரப்பிடமும் கருத்து கேட்டார். அதற்கும் செந்தில் பாலாஜி தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பியது..
அதனை நிராகரித்த நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 8-ல் (இன்று) நேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். அப்போது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட உள்ளது. அப்போது இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட உள்ளன.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..