சால்மன் மீன் குழம்பு..!
தேவையான பொருட்கள்:
சால்மன் மீன் 450 கிராம்
வெங்காயம் 1
இஞ்சி 1 துண்டு
பச்சை மிளகாய் 5
மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
மிளகு அரைத்தது 1/2 ஸ்பூன்
புதினா இலை சிறிது
எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்
கிரீம் 100மிலி
எண்ணெய் தேவையானது
கொத்தமல்லி இலை சிறிது
உப்பு தேவையானது
செய்முறை:
வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி இலை,புதினா இலை , பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் மஞ்சள்தூள், அரைத்த மிளகுத்தூள், உப்பு ஆகியவை சேர்த்து வதக்கவும்.
நறுக்கிய புதினா இலை, கொத்தமல்லி இலை, எலுமிச்சை சாறு, அரை கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
பின் மீன் சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
கடைசியாக கிரீம் சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.
மீன் உடையாமல் லேசாக கிளறிவிட்டு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.