பெண்களுக்கு பாதுகாப்பு.. சிறப்பு ஆலோசணை கூட்டம்..!
சமீப நாட்களாகவே பாலியல் குறித்த செய்திகள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளது. பெண்கள் பாதுகாப்பு இல்லாத சூழலில் வாழ்ந்து வரும் நிலையில் படிக்க செல்லும் இடங்களிலும் பாலியல் தொந்தரவுகள் அரங்கேறி வருவது வேதனையை அளிக்கின்றது.
நல்லதை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களில் ஒரு சிலர் மாணவிகளிடம் பாலியல் ரீதியான தொந்தரவில் ஈடுப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதுமாதிரியான பல இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது.
இந்தநிலையில் கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுவத்துவதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைப்பெற உள்ளது.
இதனை தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் இன்று மதியம் 3 மணிக்கு காணொளி வாயிலாக நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பாளர்கள், ஆணையர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்லூரிகளின் முதல்வர்கள், கல்வி அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.