சுவையான முட்டை சேமியா ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
எண்ணெய் தேவையானது
வெங்காயம் கால் கப்
பச்சை மிளகாய் ஒன்று
கறிவேப்பிலை சிறிது
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
தக்காளி ஒன்று
மஞ்சள்தூள் கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் அரை ஸ்பூன்
மல்லித்தூள் ஒரு ஸ்பூன்
கரம் மசாலா ஒரு ஸ்பூன்
உப்பு தேவையானது
முட்டை மூன்று
முட்டைக்கு உப்பு
முட்டைக்கு மிளகாய்த்தூள்
சேமியா 200 கிராம்
தண்ணீர் இரண்டு கப்
செய்முறை:
ஒரு ஃபேனில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், சிறிது கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாக நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
பின் தக்காளி சேர்த்து நன்றாக மசிந்து வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
அதற்கு பிறகு கால் ஸ்பூன் மஞ்சள்தூள், அரை ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் மல்லித்தூள், ஒரு ஸ்பூன் கரம் மசாலாதூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பச்சை வாசனை பிரிந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின் மசாலா அனைத்தையும் ஃபேனில் ஒரு ஓரமாக ஒதுக்கி வைக்கவும்.
பின் அந்த ஃபேனின் மறுபக்கம் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்ற வேண்டும்.
முட்டைக்கு தேவையான உப்பு, அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து முட்டையை கலக்கி வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின் முட்டையும் மசாலாவையும் நன்றாக ஒன்று சேர கலந்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
தண்ணீரில் கொதி வந்ததும் 200 கிராம் சேமியாவை சேர்த்து கலந்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும்.
அவ்வளவு தான் ரொம்ப ருசியான முட்டை சேமியா தயார்.
இதற்கு தொட்டு சாப்பிட வேர்கடலை சட்னி மற்றும் தேங்காய் சட்னி சூப்பராக இருக்கும்.