உங்கள் ஊர் செய்திகள், உங்கள் பார்வைக்காக..!!களத்தில் மதிமுகம்..!!
வேலூர் மாவட்டம் அருகேயுள்ள திப்ப சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கண்பார்வையற்ற தம்பதியர் ராமதாஸ் மற்றும் விசாலாட்சி ஆகியோர் பள்ளிகொண்டா வரை அரசு பேருந்தில் பயணம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் பேருந்தில் இருந்து இறங்குவதற்கு முன் ஓட்டுனர் பேருந்தை இயக்கியதால் விசாலாட்சி அதில் இருந்து கீழே விழுந்துள்ளனர். உடனடியாக அங்கு இருந்த பொதுமக்கள் அவரை பத்திரமாக மீட்டனர். மேலும் பேருந்து நடத்துனரிடம் பொதுமக்கள் கேட்டதற்கு அலட்சியமாக பதில் அளித்துள்ளார்.இதில் மனம் உடைந்த கண்பார்வையற்ற தம்பதியர்கள் நடத்துணரும், பேருந்து ஓட்டுனரும் நடத்துவது மிகவும் மன வேதனை அளிக்கிறது என்று தெரிவித்தனர் .
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மணிகண்டன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தடுமாறி பள்ளத்தில் விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தராத நெடுஞ்சாலை துறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வையாவூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராம மக்களுக்கு எந்த வித அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை என்றும், வார்டு உறுப்பினர்கள் செலவு செய்த பணம் வழங்கப்படவில்லை எனவும், அவர் எங்களை மிரட்டுவதோடு மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் செய்யவில்லை என இவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் இரண்டு மாதங்களுக்கு முன்பு கொண்டு வந்தனர்.மாவட்ட ஆட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் புகார் அளித்தும் இதுவரை ஊராட்சி மன்ற தலைவர் மீது எந்தவித நடவடிக்கையும் துரை ரீதியாக எடுக்கப்படவில்லை இதை அறிந்த ஒன்பது வார்டு உறுப்பினர்கள் கருப்பு ஆடை அணிந்து கூட்டத்திற்கு வந்து கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர்.
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலைக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 62 வயது மதிக்கத்தக்க சடோஷிமினெட்டா (Satoshi Mineta) என்பவர் வந்துதிருவண்ணாமலையில் 14 கிலோ மீட்டர்கிரிவலம் பாதையில் விடுதி ஒன்றில் தங்கி இருந்தார். கடந்த மே மாதம் 5ம் தேதி மாலை தங்கும் விடுதியில் இருந்து வெளியே சென்ற சடோஷிமினெட்டா மீண்டும் விடுதிக்கு திரும்பி வராததால், சந்தேகமடைந்த விடுதி காப்பாளர் கொடுத்த புகாரின் பேரில் கடந்து இரண்டு மாதமாக போலீசார் விளம்பரம் செய்தும் பல்வேறு பகுதிகளிலும்தேடி வருகின்றனர். ஆன்மீக ஸ்தலமான திருவண்ணாமலைக்கு வந்த ஜப்பான் நாட்டு சுற்றுலா பயணி மாயமான சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..