ஜவ்வரிசி உப்மா ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி 100 கிராம்
பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு கப்
கேரட் துருவல் ஒரு கப்
வறுத்த வேர்க்கடலை ஒரு கப்
பச்சைமிளகாய் 1
துருவிய இஞ்சி ஒரு டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
பொட்டுக்கடலை 2 டீஸ்பூன்
கொத்தமல்லி சிறிதளவு
நெய் 1 டீஸ்பூன்
எலுமிச்சம்பழம் அரை
செய்முறை:
ஜவ்வரிசியில் நீர் சேர்த்து ஒரு மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
ஒரு வாணலில் நெய் சேர்த்து அதில் கடுகு, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, பொட்டுகடலை, கேரட் துருவல், வேர்கடலை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் இதில் ஊறிய ஜவ்வரிசியை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
அதில் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலந்து விட்டு இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் டக்குனு ஜவ்வரிசி உப்மா ரெடி பண்ணிடலாம்.