சமையல் குறிப்புகள்..!
எந்தவொரு இனிப்பு உணவுப் பொருள் செய்தாலும் சர்க்கரை பாதியளவு சேர்த்துவிட்டு அதில் பாதியளவு கற்கண்டு பொடித்து சேர்த்தால் இனிப்பு நன்றாக சுவையாக இருக்கும்.
சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய் மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து வறுத்து பொடியாக்கி அதை சாம்பார் வைக்கும்போது கடைசியில் போட்டு இறக்கினால் சாம்பார் சுவையாக இருக்கும்.
வாரத்தில் ஒரு முறையேனும் முட்டைக்கோஸ் சூப் செய்து சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
உப்பு செய்யும்போது கடலை மாவிற்கு பதில் ஒரு கப் பச்சரிசியும் ஒரு கப் பச்சை பயிறும் கலந்து மிக்ஸியில் அரைத்து பஜ்ஜி சுட சுவையாக இருக்கும்.
உங்களின் துணியில் எண்ணெய் கரை ஏற்பட்டுவிட்டால் அதை நீக்க எலுமிச்சை பழத்தை நறுக்கி அதில் உப்பு கலந்து துணியில் தேய்க்க கறை நீங்கும்.
நறுக்கிய வெங்காயம் நீண்ட நேர்த்திற்கு கெட்டுபோகாமலும் நிறம் மாறாமலும் இருக்க அதில் சிறிது வெண்ணெய் கலந்து வைக்கலாம்.
ரசம் வைக்கும்போது அதில் புளிப்பு குறைந்துவிட்டால் கவலை வேண்டாம் வீட்டில் மாங்காய் பொடி இருந்தால் அதை கால் ஸ்பொன் சேர்த்துக் கொள்ளலாம்.
