அப்பளம் குழம்பு சாப்பிட்டு இருக்கீங்களா..?
தேவையான பொருட்கள்:
சாம்பார் பொடி 2 ஸ்பூன்
புளி எலுமிச்சை அளவு
அப்பளம் 2
கடுகு 1/2 ஸ்பூன்
கடலை பருப்பு 1/2 ஸ்பூன்
வெந்தயம் 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 2
எண்ணெய் தேவையானது
உப்பு தேவையானது
செய்முறை:
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கடலை பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின் அப்பளத்தை உடைத்து சேர்த்து சாம்பார் பொடி சேர்த்து அதில் கலந்து வதக்கவும்.
பின் அதில் புளிக்கரைசலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும்.
அவ்வளவுதான் அப்பள குழம்பு தயார்.
வீட்டில் காய்கறிகள் இல்லாதபோது இந்த அப்பள குழம்பு பயனுள்ளதாக இருக்கும்.