விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் விதிக்கப்பட்ட தடைகள்..!!
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் அடுத்த மாதம் செப்டம்பர் 7ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி அன்று பல்வேறு விஷயங்களை மாநகர காவல் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது..
வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது.. இந்நிலையில் இன்று சென்னையில் இன்று பெருநகர காவல் துறை சார்பில் விநாயகர் சிலை அமைப்பு வழிபாட்டினருடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..
இந்த கூட்டத்தில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் ஆ.அருண், பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் N.கண்ணன், 4 மண்டல காவல் இணை ஆணையாளர்கள்., போக்குவரத்து துறை காவல் அதிகாரிகள், நகர காவல் அதிகாரிகள் மற்றும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, இந்து அனுமன் சேனா, பாரதிய ஜனதா காட்சி, பாரத் இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத், உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்..
இந்த ஆலோசனை கூட்டத்தில் விநாயகர் சிலை அமைப்பது, வழிபாடு செய்வது, சிலையை கடலில் கரைப்பது வரை ஆலோசனைகள் நடத்தப்பட்டு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது..
விதிமுறைகள் :
1) சிலை வைக்கும் இடத்தில் அதன் உரிமையாளரை வற்புறுத்தி வைத்திருக்க கூடாது.
2) நெடுஞ்சாலை பகுதிகளில் சிலை வைப்பவர்கள் நெடுஞ்சாலை துறையில் அதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்..
3) தீயணைப்புதுறை மற்றும் மின்வாரிய துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ்கள் கட்டாயம் வாங்கி வைத்திருக்க வேண்டும்.
4) சிலையில் உயரம் 10 அடி மட்டுமே இருக்க வேண்டும்., 10 அடிக்கு மேல் வைக்க அனுமதி கிடையாது மீறி வைத்தால் அபராதம் விதிக்கப்படும்..
5) கோவில்கள், மருத்துவமனை, மற்றும் பள்ளி, கல்லூரி பக்கத்தில் சிலைகள் வைக்க அனுமதி கிடையாது குறைந்தது 20மீட்டர் தூரமாவது இடைவெளி இருக்க வேண்டும்..
6) மாதவிதத்தை தூண்டும் விதமான செயல்களில் ஈடுபட்டு மத சண்டையை உருவாக்க கூடாது..
7) சிலைகளின் பாதுகாப்பிற்காக தன்னார்வலர்கள் 24 மணி நேரமும் ரவுன்சில் இருக்க வேண்டும்
8) சிலைக்கு பக்கத்தில் எந்த விதமான கட்சி பேனரும் இருக்க கூடாது…
9) மின்சாரம் மற்றும் பந்தல்களில் தீப்பற்றிக் கொள்ளாமல் இருக்க அதற்கான உபகரணங்களை பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்..
10) பட்டாசு வெடிக்க வோ.., அதிக சத்தத்துடன் பாட்டு போட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயலில் ஈடுபடக் கூடாது.
11 ) விநாயகர் சிலையை கரைக்கும் நாளில் அதிக பேருக்கு அனுமதி கிடையாது., அமைதியான முறையில் எடுத்து செல்ல வேண்டும்..
இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டால் மட்டுமே விநாயகர் சிலை வைக்க முடியும் என சென்னை மாநகர காவல்துறை சார்பில் விதிக்கப்பட்டுள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..