தாபா ஸ்டைல் மட்டன் கறி ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
ஊறவைக்க:
மட்டன் 1/2 கிலோ
மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
தயிர் 3 ஸ்பூன்
உப்பு தேவையானது
கறிக்கு:
மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
உப்பு தேவையானது
எண்ணெய் தேவையானது
சீரகப்பொடி 1 ஸ்பூன்
மல்லிப்பொடி 1 ஸ்பூன்
கரம் மசாலா 1 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
கிராம்பு 3
காய்ந்த மிளகாய் 2
வெங்காயம் 2 நறுக்கியது
தக்காளி 2 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
கொத்தமல்லி சிறிது
செய்முறை:
முதலில் மட்டனை நன்றாக சுத்தம் செய்து நீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
பின் மட்டனில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, தயிர் சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடங்களுக்கு ஊறவைக்க வேண்டும்.
ஊறிய பிறகு ஒரு குக்கரில் மட்டனை மாற்றி அதில் எண்ணெய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகப்பொடி, மல்லித்தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
அதில் அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி மட்டன் வேகும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கிராம்பு, மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
பின் வேகவைத்த மட்டன் சேர்த்து மூடி போட்டு மூடி தண்ணீர் நன்றாக வற்றும் வரை வேகவைக்கவும்.
கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் தாபா ஸ்டைல் மட்டன் கறி தயார்.
இதற்கு சாதம், சப்பாத்தி, பரோட்டா, நாண் ஆகியவை சூப்பராக இருக்கும்.