இ-மெயிலில் வந்த மிரட்டல்..!! பீதியில் பள்ளி கூடங்கள்..!! பரபரப்பான மதுரை..!!
மதுரையில் இ-மெயில் மூலம் 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் போலீசார் சோதனையால் பரபரப்பு
மதுரையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளிகளில் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மதுரையில் பிரபல நரிமேடு “கேந்திர வித்யாலயா பள்ளி, வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி, ஜீவனா பள்ளி” உள்ளிட்ட 9 பள்ளிகளுக்கு இன்று காலை ஒரு இ-மெயில் வந்துள்ளது.
வழக்கம் போல இன்று அலுவலகங்களுக்கு வந்த பள்ளி ஊழியர்கள் இ-மெயிலை பார்த்துள்ளனர். அதில், “பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், விரைவில் வெடிக்கும்” என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், பள்ளியை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
இது குறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் 9 பள்ளிகளிலும் போலீசார் சோதனை செய்தனர்.
இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் பள்ளியின் இ-மெயில் முகவரி அறிந்தவராகத்தான் இருக்கு கூடும். அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தரா அல்லது பல்வேறு நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனரா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..