ஹெல்தியான நெல்லிக்காய் சாதம்..!
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் 4
நல்லெண்ணெய் 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 1/2 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 2
வறுத்த வேர்க்கடலை
பெருங்காயத்தூள் கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் 2 நறுக்கியது
இஞ்சி 1 துண்டு
மஞ்சள்தூள் அரை ஸ்பூன்
உப்பு தேவையானது
கறிவேப்பிலை சிறிது
வேகவைத்த சாதம்
செய்முறை:
நெல்லிக்காயை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு,உளுத்தம் பருப்பு,கடுகு,சீரகம்,காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின் வேர்கடலை,பெருங்காயத்தூள், பச்சை மிளகாய்,இஞ்சி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
அதில் மஞ்சள்தூள்,உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கலந்து பின் துருவிய நெல்லிக்காய் சேர்த்து வதக்க வேண்டும்.
கடைசியாக வேகவைத்த சாதம் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அவ்வளவுதான் ஹெல்தியான நெல்லிக்காய் சாதம் தயார்.