ருசியான பூண்டு ஊறுகாய்..!
தேவையான பொருட்கள்:
முழு பூண்டு 6
கடுகு 2 ஸ்பூன்
வெந்தயம் 1 1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய் அரை கப்
கறிவேப்பிலை சிறிது
புளி தண்ணீர் அரை கப்
மஞ்சள்தூள் அரை ஸ்பூன்
உப்பு தேவையானது
மிளகாய்த்தூள் 4 ஸ்பூன்
பொடித்த வெல்லம் 1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் பூண்டுகளை தோல் உரித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் கடுகு,வெந்தயம் சேர்த்து லேசாக வறுத்து ஆறவைத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
புளியை ஊறவைத்து பின் கெட்டியாக கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டுகளை சேர்த்து பொரித்து தனியே எடுத்துக் கொள்ளவும்.
பொரித்த பூண்டுகளில் பாதியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
எண்ணெய் இருக்கும் வாணலில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் அரைத்த பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
பின் மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், பொடித்த வெல்லம் சேர்த்து கலந்து பின் கெட்டியான புளி தண்ணீரை சேர்த்து கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.
நன்றாக கெட்டியாக வந்ததும் மீதமுள்ள பொரித்த பூண்டுகளை சேர்த்து கலந்து மேலும் அதில் அரைத்த பொடியை சேர்த்து கலந்து இறக்கவும்.
அவ்வளவுதான் ருசியான பூண்டு ஊறுகாய் தயார்.