சுவையான சிங்கப்பூர் பிரைட் ரைஸ் ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
அரிசி 1 கப்
பூண்டு 1 நறுக்கியது
ஆலிவ் ஆயில் 2 ஸ்பூன்
மிளகு 1/2 ஸ்பூன்
வெங்காயத்தாள் 1/2 கப்
குடைமிளகாய் 1/2 கப்
கேரட் 1/4 கப்
பச்சை மிளகாய் 1
வினிகர் 1/2 ஸ்பூன்
சில்லி சாஸ் 2 ஸ்பூன்
சோயா சாஸ் 1 ஸ்பூன்
சில்லி பூண்டு சாஸ் 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
செய்முறை:
முதலில் அரிசியை வேகவைத்து வடித்து பின் ஆறவைக்க வேண்டும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் ஆயில் ஊற்றி சூடானதும் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின் வெங்காயத்தாள், பச்சை மிளகாய், கேரட் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
அடுத்ததாக நறுக்கிய குடைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
காய்கறிகள் நன்றாக வதங்கியதும் வேகவைத்த சாதம் சேர்த்து அதில் அனைத்து வகையான சாஸ் சேர்த்து கிளறவும்.
கடைசியாக மிளகுத்தூள் சேர்த்து கிளறவும்.
அவ்வளவுதான் சிங்கப்பூர் பிரைட் ரைஸ் தயார்.
