கசப்பில்லாத பாகற்காய் புளிக் குழம்பு..!
தேவையான பொருட்கள்:
அரைக்க:
எண்ணெய் ஒரு ஸ்பூன்
சீரகம் அரை ஸ்பூன்
சோம்பு அரை ஸ்பூன்
மல்லி ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகாய் மூன்று
வெங்காயம் ஒன்று
தேங்காய் அரை கப்
குழம்பு செய்ய:
நல்லெண்ணெய்
பாகற்காய் இரண்டு
தக்காளி 1
மஞ்சள்தூள் அரை ஸ்பூன்
மல்லித்தூள் 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
புளி எலுமிச்சை அளவு
மொச்சை பயிறு அரை கப் வேகவைத்தது
தண்ணீர்
தாளிக்க:
எண்ணெய்
கடுகு அரை ஸ்பூன்
உளுந்து அரை ஸ்பூன்
வெங்காயம் பாதி அளவு
கறிவேப்பிலை சிறிது
செய்முறை:
ஒரு ஃபேனில் எண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து சூடானதும் அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் மல்லி, காய்ந்த மிளகாய் மூன்று, வெங்காயம் ஒன்று ஆகியவற்றை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனுடன் பொடியாக நறுக்கிய அரை கப் தேங்காய் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.
பின் வறுத்த அனைத்தையும் நன்றாக சூடு ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது நீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் விதைகளை நீக்கி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிய பாகற்காயை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின் அதில் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, கால் ஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு ஸ்பூன் மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
மேலும் அதில் அரைத்த மசாலா விழுது சேர்த்து, வேகவைத்த மொச்சை பயிறு, ஊறவைத்த புளிக் கரைசல் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
ஒரு ஃபேனில் எண்ணெய் சேர்த்து அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுந்து, பாதி அளவு நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சிறிது சேர்த்து வதக்கிக் பின் அதனை கொதிக்கும் குழம்பில் சேர்த்து கலந்து விடவும்.
அவ்வளவுதான் சுவையான பாகற்காய் குழம்பு தயார்.
