இன்னிக்கு நைட் சிக்கன் பாஸ்தா..!
தேவையான பொருட்கள்:
பாஸ்தா – 1 1/2 கப்
சிக்கன் – 100 கிராம்
இத்தாலியன் சீசனிங் – 3 தேக்கரண்டி
பூண்டு தூள் – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1 பூண்டு
காய்ந்த மிளகாய் சிதறல்கள் – 2 தேக்கரண்டி
அரைத்த தக்காளி – 2 கப்
மொஸெரெல்லா சீஸ் – 150 கிராம்
கிரீம் – 1/2 கப்
எண்ணெய்
உப்பு
மிளகு
துளசி இலைகள்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பாஸ்தா சேர்த்து உப்பு கலந்து வேகவைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு ஃபேனில் எண்ணெய் சேர்த்து அதில் சிறிதாக வெட்டப்பட்ட சிக்கன், உப்பு, இத்தாலியன் சீசனிங், பூண்டு தூள்,மிளகுத்தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
மற்றொரு கடாயில் எண்ணெயில் நறுக்கிய வெங்காயம்,இத்தாலியன் சீசனிங், நறுக்கிய பூண்டு, காய்ந்த மிளகாய் சிதறல்கள்,மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அரைத்த தக்காளி விழுது,வேக வைத்த பாஸ்தா, மொஸெரெல்லா சீஸ், கிரீம் மற்றும் வேகவைத்த சிக்கன் சேர்த்து வதக்க வேண்டும்.
கடைசியாக துளசி இலைகளை தூவி கிளறி இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் ஈசியா சிக்கன் பாஸ்தா தயார்.