”நேரடியாக தனுஷ் என்னிடம் அப்படி கேட்டது வருத்தமாக இருந்தது”.. கலா மாஸ்டர்..!
கலா மாஸ்டர்:
தமிழ் சினிமாவில் நடன இயக்குநாரக கலக்கி வருபவர் கலா மாஸ்டர். புன்னகை மன்னன் திரைப்படத்தின் மூலம் திரைத்துரையில் அறிமுகமான இவர் தானியார் தொலைக்காட்சியில் ஔிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்தார்.
“கிழி கிழி என கிழித்து விட்டாய்” என்ற ஒரு வார்த்தையாலே பெரிய அளவில் பிரபலமானர். இந்த நிகழ்ச்சியில் டான்ஸ் ஆட திறமையுள்ள பலர் அதற்கு சரியான சந்தர்ப்பம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு கலா மாஸ்டரே பல உதவிகள் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டான்ஸ் கிளாஸ்:
இதனை தொடர்ந்து கலா மாஸ்டர் தனியாக டான்ஸ் கிளாஸ் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் பல நடிகர் நடிகைகள் அதிகமானோர் அவருடைய டான்ஸ் கிளாசில் சேர்ந்து கற்றுக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் நடிகர் தனுஷ் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் தன்னுடைய டான்ஸ் கிளாசில் நடிகர் தனுஷ் சேர்ந்து நடனம் கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார்.
திருடா திருடி:
மேலும் ”திருடா திருடி திரைப்படத்தில் தனுஷுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுப்பதற்காக போயிருந்தேன். அப்போது என்னை பார்த்ததும் தனுஷ் மேடம் நான் தான் தனுஷ் என்று சொன்னார். நான் எனக்கு தெரியும் உங்களுடைய படத்திற்காக தானே நான் வந்திருக்கிறேன் என்று சொன்னேன்.
அதற்கு அவர் நான் உங்களுடைய டான்ஸ் கிளாஸில் டான்ஸ் கற்று இருக்கிறேன் என்று சொல்ல, ஆமா நான் பார்த்திருக்கிறேன் என்று நானும் சொன்னேன்.
அந்த நேரத்தில் நீங்க இவனெல்லாம் எங்க ஹீரோவாக போகிறான் என்று சொன்னிங்களே..? என்று சொன்னார். இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். நான் அந்த மாதிரி உன்னை பற்றி ஒரு வார்த்தை கூட சொன்னது கிடையாது, நானே குரூப் டான்ஸராக இருக்கும்போது எவ்வளவு அவமானங்களை பட்டிருக்கிறேன் அதனால் நான் யாரையும் இந்த மாதிரி சொல்ல மாட்டேன், நான் சொன்னதை நீ தப்பா புரிஞ்சு இருக்கே என்று தனுஷிடம் கூறினேன்.
அந்த நேரத்தில் தனுஷ் நான் சொல்லாததை என்னிடம் வந்து நேரடியாக கேட்டது மிகவும் வருத்தமாக இருந்தது. பின்னர் என்னிடம் பேசிய தனுஷ் நான் அந்த நேரத்தில் ரொம்ப ஒல்லியா இத்துனூண்டு இருப்பேன்.
அப்போ நீங்க உங்க மனதில் இவனெல்லாம் எங்க ஹீரோவாக வரப் போறான் என்று நினைத்திருப்பீங்க என்று நானே சொல்கிறேன் என்று சிரித்துக் கொண்டே கூறியதாக கலா ம்ஸ்டர் கூறியுள்ளார்.
-பவானி கார்த்திக்