காரசாரமான நண்டு ரசம் ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
சோம்பு
சீரகம்
வெங்காயம்
எண்ணெய்
நண்டு
தக்காளி
பச்சை மிளகாய்
உப்பு
தனியா
மிளகு
செய்முறை:
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சோம்பு,சீரகம்,வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதில் நண்டு,பச்சை மிளகாய்,உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பதினைந்து நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
ஒரு மிக்ஸியில் சீரகம்,மிளகு,தனியா,காய்ந்த மிளகாய் ஆகியவற்றை கொரகொரப்பாக அரைத்து அதை நண்டில் சேர்த்து கிளறி கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் நண்டு ரசம் தயார்.
