பயிற்சியின் போது காவலர்க்கு நேர்ந்த சோகம்… அதிர்ச்சியில் சக காவலர்கள்…!
தென்காசி குலசேகரக்கோட்டையில் வசித்து வரும் பொன்ராஜ் என்பவரின் மகன் பசுபதி மாரி. திருமணமான இவர் தற்போது துப்பாக்கி சுடும் தளத்தில் கமாண்டோ பயிற்சியில் இருக்கிறார்.
இந்த சூழலில் கடந்த 5-ம் தேதி பசுபதி மாரி ஓட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அதற்கான ஓடிக்கொண்டிருந்தபோது, திடீரென நின்ற அவர் சரிந்து கீழே விழுந்தார். இதனை கண்ட சக காவலர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பசுபதிக்கு திவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக மரணம் அடைந்தார். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த சக காவலர்களிடம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”