செட்டிநாடு காளான் மசாலா ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
காளான் – 200 கிராம்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
கம்மின் விதைகள் – 1/2 தேக்கரண்டி
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை
தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு
கொத்துமல்லி இலை
மசாலா விழுது அரைக்க:
எண்ணெய்
கொத்தமல்லி விதை – 1 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 4
பூண்டு
இஞ்சி
துருவிய தேங்காய் – 2 தேக்கரண்டி
மிளகாய் தூள்
செய்முறை:
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மசாலா விழுது அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எல்லாம் சேர்த்து வதக்கி பின் அதில் துருவிய தேங்காயும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின் அதில் ஒரு துண்டு ஊறிய புளியை சேர்த்து நீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு,சீரகம்,வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளி,மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு அதில் நறுக்கிய காளான், அரைத்த மசாலா விழுது சேர்த்து மிதமான தீயில் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும்.