வயநாடு நிலச்சரிவு..! 150-யை தாண்டிய பலி எண்ணிக்கை..!
தென்கிழக்கு பருவமழை காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் கேரளாவில் சாலைகள், பாலங்கள் என அனைத்தும் சேதமடைந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலையில், வயநாடு சூரல் மலைப் பகுதியில் பெய்த கனமழையால் மேப்பாடு முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.
மேலும், அந்த நிலச்சரிவில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், அந்த பேரிடரில் தோண்ட தோண்ட சடலங்கள் கிடைப்பதால் பலி எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
#WATCH | Kerala: Rescue and search operation underway in Wayanad's Chooralmala after a landslide broke out yesterday early morning claiming the lives of 143 people
(latest visuals) pic.twitter.com/aqAG9uZMEP
— ANI (@ANI) July 31, 2024
இதற்கிடையே, நேற்று இரவு மிக மோசமான வானிலையால் தேடுதல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது., அதன் பின் மீண்டும் இன்று காலை 6.22 மணிக்கு மீண்டும் துவங்கியது. மீட்புப்படையினர் 4 குழுக்களாகப் பிரிந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சமயத்தில் மீட்புப்பணிக்காக அப்பகுதியில் தற்காலிக பாலம் ஒன்றை அமைத்து, சுமார் 150 ராணுவ வீரர்கள் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கோர சம்பவத்தில், இதுவரை 155 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, தற்போது வரை உயிரிழந்தவர்களில் 54 உடல்கள் பிரேத பரிசோதனை நிறைவடைந்து, அதில் 52 உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று நடந்த பிரேதப் பரிசோதனையில் சில சடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..