பாலக்கீரை பருப்பு சாதம்..! உருளை ப்ரை..!
தேவையான பொருட்கள்:
கீரைக்கு:
துவரம் பருப்பு அரை கப்
அரிசி ஒரு கப்
தண்ணீர் மூன்று கப்
எண்ணெய் தேவையானது
வெங்காயம் ஒன்று
சீரகம் அரை ஸ்பூன்
பூண்டு நான்கு
பச்சை மிளகாய் மூன்று
தக்காளி இரண்டு
மஞ்சள்தூள் அரை ஸ்பூன்
பாலக்கீரை ஒரு பாக்கெட்
சாம்பார் பவுடர் ஒரு ஸ்பூன்
உப்பு தேவையானது
கொத்தமல்லி இலை சிறிது
நெய் ஒரு ஸ்பூன்
பொரியலுக்கு:
உருளைக்கிழங்கு மூன்று
மஞ்சள்தூள் கால் ஸ்பூன்
மல்லித்தூள் 2 ஸ்பூன்
கரம் மசாலா அரை ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
சீரகத்தூள் அரை ஸ்பூன்
மிளகுத்தூள் அரை ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
எலுமிச்சை அரை பழம்
பெருங்காயத்தூள் கால் ஸ்பூன்
எண்ணெய் தேவையானது
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கை சின்னதாக வெட்டிக் கொள்ளவும்.
பின் அதில் உருளைக்கிழங்கு செய்ய கொடுக்கப்பட்டுள்ள மசாலா அனைத்தையும் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஃபேனில் சிறிது எண்ணெய் சேர்த்து அதில் கலந்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து பெருங்காயத்தூள் கால் ஸ்பூன் சேர்த்து வதக்கி கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும்.
ஒரு குக்கரில் சிறிது எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம், சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
பின் ஒரு கட்டு நறுக்கிய பாலக்கீரை சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின் இதில் ஊறவைத்த சுவரம் பருப்பு, சாம்பார் பவுடர், மஞ்சள்தூள் சேர்த்து கலந்து அதில் ஒரு கப் ஊறவைத்த அரிசி சேர்த்து கலந்து விட வேண்டும்.
பின் இதில் 3 கப் நீர் சேர்த்து கலந்து குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின் அதில் நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விட வேண்டும்.
அவ்வளவுதான் பாலக்கீரை சாதம் மற்றும் உருளைக்கிழங்கு ப்ரை தயார்.