ஆளில்லா வீட்டில் ஆட்டைய போட வந்த தந்தை, மகன்..!! ஷாக் கொடுத்த போலீஸ்..!!
கலவையில் வீடுகளின் பூட்டை உடைத்து பல்வேறு பகுதிகளில் திருடிய தந்தை மகன் கைது 28 சவரன் தங்கநகைகள் 2 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்
ராணிப்பேட்டை மாவட்டம், கலவையில் காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான காவல்துறையினர் வேம்பி பகுதி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவழியாக சந்தேகிக்கும் விதமாக வந்த இருவரை பிடித்து விசாரணை செய்த போது முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்ட போது இரண்டு நபர்களும் ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த இருளர் இனத்தைச் சார்ந்த தந்தை மகன் மகனான ஏழுமலை(40) மற்றும் சக்திவேல்(19) என்பது தெரியவந்தது.
மேலும் தந்தை மகனான ஏழுமலை மற்றும் சக்திவேல் ஆகிய இருவரும் இரும்பேடு பகுதியை சேர்ந்த பாபா என்பவருடன் இணைந்து கலவை, வேம்பி,நல்லூர், கணியன் தாங்கள், வாழப்பந்தல், ஆற்காடு, திமிரி, வாலாஜா, என பல்வேறு பகுதிகளில் நோட்டமிட்டு கோவில் மற்றும் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கலவை காவல் துறையினர் ஏழுமலை மற்றும் சக்திவேல் ஆகிய இருவரின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 28 சவரன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் இரண்டு நபர்களையும் நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தி பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். மேலும் பாபா என்ற குற்றவாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.. இந்த சம்பவம் கலவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..