தினமும் ஒரு வால்நட் உண்பதால் கிடைக்கும் நன்மைகள்…!
ஒமேகா- 3 கொழுப்பு அமிலம் வால்நட்டில் உள்ளது. வால்நட் நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை அழித்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது இது இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
வால்நட்டில் உள்ள ஒமேகா-3 அமிலம், மூளையின் செயல்பாட்டை சரிசெய்து அறிவாற்றலை அதிகரிக்கிறது. நரம்பு மண்டலத்தினால் உண்டாகும் நோய்களையும் குறைக்கிறது.
வால்நட்டில் பாலிபினால்கள் மற்றும் பைட்டோநியூட்ரியண்டுகள் அடங்கி இருக்கிறது. இது அழற்சி எதிர்ப்பு விளைவுகளை கொண்டிருக்கிறது. உடம்பில் உண்டாகும் வீக்கத்தை குறைக்கிறது.
வால்நட்டில் அதிக கலோரிகள் இருந்தாலும் உடல் எடையை சீராக வைத்திருக்கிறது. புரதம் மற்றும் நார்ச்சத்துகள் அதிகமாக உள்ளதால் சாப்பிட்ட உணர்வு உண்டாகும்.
இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. உடம்பில் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்கிறது. வால்நட்டில் நார்ச்சத்து உள்ளதால் செரிமானத்தை சீராக்குகிறது.
எலும்புகளுக்கு வலுவூட்டக்கூடிய பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் இதில் அதிக அளவில் இருப்பதால் , வால்நட் எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது.
வால்நட்டில் ஆன்டி ஆக்சிடென்டுகள் , வைட்டமின் ஈ ஆகியவை அதிகம் இருப்பதால் இது சருமத்திற்கு நன்மை அளிக்கக் கூடியது.
வால்நட் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு வால்நட் உதவியாக இருக்கும்.
தூக்கத்தை சீராக்கக்கூடிய ஹார்மோனான மெலடோனை ஊக்குவிக்கிறது. இதனால் தூக்கம் சீராக இருக்கும்.
வால்நட்டில் பாலிபினால்கள் உள்ளிட்ட ஆன்டிஆக்சிடென்டுகள் இருப்பதால் இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து உடலை பாதுகாக்கிறது. இதனால் நாள்பட்ட நோய்களின் அபாயமும் குறைகிறது.
