உங்க கிட்னி ஆபத்தில் இருப்பதற்கான அறிகுறிகள்..!
1. உடல் வீக்கம்: உங்களுடைய சிறுநீரகம் சரியாக செயல்படாத நிலையில் திரவங்கள் உங்கள் உடலில் அப்படியே தங்கி உங்களின் கை. கால், பாதம் மற்றும் முகங்களில் அதிகபடியான வீக்கம் இருக்கும்.
2. சிறுநீர் கழிப்பதில் மாற்றம்: நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். சிறுநீர் அடிக்கடி அழித்தல், சிறுநீர் குறைவாக வருதல், சிறுநீரின் நிற மாற்றம், சிறுநீரில் ரத்தம், நுரை ஆகியவை தென்பட்டால் கவனமாக இருக்க வேண்டும்.
3. முதுகு வலி: சிறுநீரக பாதிப்பு இருப்பவர்களுக்கு முதுகு பகுதியின் விலா எலும்புக்கு கீழ் தொடர் வலி காணப்படும். இப்படி இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
4. ரத்த அழுத்தம்: ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் சிறுநீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. திடீரென அதிகமான ரத்த அழுத்தம் அல்லது குறைவான ரத்த அழுத்தம் என மாறி மாறி இருந்தால் அது சிறுநீரக பிரச்சனையாக இருக்கலாம்.
5. சோர்வு மற்றும் பலவீனம்: சிறுநீரகம் பிரச்சனையில் இருக்கும்போது அது உங்களின் உடம்பில் கிருமிகளை தங்கவைக்கும். இதனால் உங்களுடைய உடம்பு எப்போதும் சோர்வாகவும் பலம் இல்லாமலும் உணர்வீர்கள்.
6. பசி இல்லாமை மற்றும் உடல் எடையில் மாற்றம்: சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்றால் அது உங்களுக்கு பசியின்மை, வாந்தி, குமட்டல் ஆகியவற்றை ஏற்ப்படுத்தும். இதனால் உங்கள் உடல் திடீரென உடல் எடை அதிகரித்தல் அல்லது உடல் எடை குறைதல் ஆகியவை ஏற்ப்படலாம்.