சாமையின் நன்மைகள்..!
- சாமானியர்களின் உணவாக சொல்லப்படும் சாமையில் பீட்டா கரோட்டின்,இரும்புச்சத்து,புரதம்,நார்ச்சத்து உள்ளது.
- சாமை வயிற்றில் உண்டாகும் செரிமான பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.
- அரிசியில் இருக்கும் நார்ச்சத்தை விட இதில் ஏழு மடங்கு நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
- சாமையை சாப்பிடுவோருக்கு வயிற்றில் இருக்கும் புண் குணமாகும்.
- மேலும் வயிற்றில் உண்டாகும் மற்ற நோய்களுக்கும் இது மருந்தாக உதவும்.
- சாமையில் வைட்டமின் சத்து நிறைந்து காணப்படுகிறது.
- சாமை நாவில் உண்டாகும் வறட்சியை போக்கும்.
- இதில் மற்ற சிறுதானியங்களை காட்டிலும் அதிகமான இரும்புச்சத்து உள்ளதால் இரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது.