இன்னிக்கு ஸ்நாக் கலர்கலரான இனிப்பு பூந்தி..!
கடலை மாவு 3 கப்
தண்ணீர்
ரெட் புட் கலர் ஜெல் 3 சொட்டு
பச்சை கலர் பவுடர்
எண்ணெய் தேவையானது
முந்திரி,திராட்சை,ஏலக்காய்த்தூள்,பச்சகற்பூரம்
சர்க்கரை 2 கப்
கடலை மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
மூன்றாக மாவை பிரித்து ஒன்றில் பச்சை நிறம்,மற்றொண்டில் சிவப்பு நிறத்தை கலந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறு சிறு குழிகள் உள்ள கரண்டியை கொண்டு மாவை பிழிந்து விட்டு பூந்தியை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து சர்க்கரை மற்றும் சிறிது தண்ணீர் விட்டு சர்க்கரை கரையும் வரை வைத்திருந்து பின் இறக்கி அந்த பூந்தியில் ஊற்றவும்.
அதற்கு மேல் வறுத்த திராட்சை,முந்திரி,ஏலக்காய்த்தூள் மற்றும் பச்சை கற்பூரத்தை தூவி கலந்து விடவும்.
சர்க்கரை பாகு நன்றாக ஊறியதும் சாப்பிடலாம்.
அவ்வளவுதான் சட்டுனு இனிப்பு பூந்தி தயார்.