அடிக்கடி கடிக்கும் பூச்சுக்கடிக்கு வீட்டு வைத்தியம்…!
தேனீ மற்றும் குளவி ஆகியவை கொட்டினால் அந்த இடத்தில் இருக்கும் கொடுக்கு , முள்ளு ஆகியவற்றை எடுத்துவிட்டு அந்த இடத்தில் மண்ணெண்ணெய் தேய்க்க வலியில் இருந்து விடுபடலாம்.
தேள் கொட்டினால், இரண்டு வெற்றிலையுடன் ஐந்து மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டால் விஷம் இறங்கிவிடும்.
ஜெல்லி மீனால் உண்டாகும் வலி வீக்கத்திற்கு வினிகர் கொண்டு அந்த இடத்தில் கழுவி வர குணமாகும்.
கம்பளி பூச்சு பட்ட இடத்தில் உண்டாகும் வீக்கத்தை சரிசெய்ய வெற்றிலையை அந்த இடத்தில் அழுத்தி தேய்க்க அது குறையும்.
சிலந்தி கடித்த இடத்தில் ஆடாதொடை இலை, மஞ்சள் , மிளகு ஆகியவற்றை அரைத்து தேய்த்தால் குணமாகும்.
வண்டுகள் கடித்த இடத்தில் பப்பாளி பழ இலையை தேய்க்க சரியாகும்.
அரணை கடித்தால் 100 கிராம் பனைவெல்லம் சாப்பிட விஷம் முறியும்.
எறும்பு கடித்த இடத்தில் வெங்காயத்தை தேய்க்க வலி குறையும்.
பூனை கடித்த இடத்தில் மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு இரண்டையும் சம அளவு எடுத்து கடித்த இடத்தில் தடவ குணமாகும்.