கோடை வெயிலில் உடல் குளிர்ச்சிக்கு சில டிப்ஸ்..!!
அடிக்கும் வெயிலில் உடல் மட்டுமல்ல வயிறு, தலை அனைத்தும் அதிகம் சூடாகி விடுகிறது.
இதனால் வயிற்று வலி, தலைவலி, நீரிழவு, அம்மை போன்ற நோய்கள் வருகிறது.
அவை வாராமல் தடுக்க தினமும் ஒரு இயற்கை காய்கறி, பழம் மற்றும் பழம் ஜூஸ் எடுத்துக்கொள்வது சிறந்தது.
எந்த வகையான உணவு பொருள், எதற்கு தீர்வு என்று பார்க்கலாம்.
உடல் குளிர்ச்சி : உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள தினமும் ஒரு நெல்லிக்காய் ஜூஸ் அல்லது வெள்ளரி ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம்.
இளநீர் : தினமும் ஒரு இளநீர் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது, தினமும் ஒரு இளநீர் குடிப்பதால் உடல் சூட்டை தனித்துவிடும்.உஷ்னம் வர விடாது.
தினமும் இளநீர் குடிப்பது சிலர் உடலுக்கு ஏற்றுக்கொள்ளாது, அவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது இளநீர் எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் இது போன்ற பல ஆரோக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி