மசாலா சப்பாத்தி ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு 2 கப்
மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
நெய் தேவையானது
உப்பு தேவையானது
எண்ணெய் தேவையானது
செய்முறை:
ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு 2 கப், மிளகாய்த்தூள் அரை ஸ்பூன், கரம் மசாலா தூள் 1 ஸ்பூன், மஞ்சள்தூள் கால் ஸ்பூன், தேவையான அளவு உப்பு, நெய், தேவையான அளவு நீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ள வேண்டும்.
பிசைந்த சப்பாத்தி மாவை அப்படியே 15 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும்.
பின் மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
சப்பாத்தி உருட்டும் கல்லில் சிறிது மாவினை தூவி மாவு உருண்டைகளை வைத்து சப்பாத்தி தேய்த்துக் கொள்ள வேண்டும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சப்பாத்தியை இதில் போட்டு மேலே நெய் மற்றும் எண்ணெய் கலந்த கலவையை தடவி இருபுறமும் வேகவைத்து எடுக்க வேண்டும்.
அவ்வளவுதான் மசாலா வாசனை கமகமக்கும் மசாலா சப்பாத்தி தயார்.