சுண்டைக்காய் சாம்பார்..!
தேவையான பொருட்கள்:
பச்சை சுண்டைக்காய் 100 கிராம்
துவரம் பருப்பு 100 கிராம்
புளி எலுமிச்சை பழ அளவு
சாம்பார் பொடி 4 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
வெந்தயம் 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் கால் ஸ்பூன்
எண்ணெய் 4 ஸ்பூன்
உப்பு தேவையானது
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை நன்றாக கழுவி அரை மணி நேரத்திற்கு நீரில் ஊற வைக்க வேண்டும்.
பின் ஊறவைத்த துவரம் பருப்பை ஒரு குக்கரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக குழைய வேக வைக்க வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி அதில் சுண்டைக்காயை தட்டி சேர்த்து வதக்க வேண்டும்.
புளியை கரைத்து இதனுடன் சேர்த்து, உப்பு, சாம்பார் பொடி போட்டு கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.
பின் வேகவைத்த பருப்பு சேர்க்கவும்.
ஒரு ஃபேனில் மீதமுள்ள 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, வெந்தயம் சேர்த்து தாளித்து அதில் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி பின் இதனை கொதிக்கும் சாம்பாரில் சேர்த்து இறக்க வேண்டும்.
கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுண்டைக்காய் சாம்பார் தயார்.