கேக் செய்யும்போது இதை ஃபாலோ பண்ணுங்க..!
தோசை மாவுடன் சிறிது சோள மாவு கலந்து தோசை சுட்டால் ருசியாக இருக்கும், உடம்பிற்கும் நல்லது.
வெண்ணெயின் மீது உப்பை தூவி விட நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
இஞ்சி நீண்ட நாட்களுக்கு காய்ந்து போகாமல் இருக்க வீட்டில் இருக்கும் பூந்தொட்டியில் போட்டுவைத்து தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தலாம்.
பிரியாணி செய்த பிறகு சூடான பாலில் குங்குமப்பூ கலந்து பிரியாணியில் ஊற்றி கிளறினால் சுவை அருமையாக இருக்கும்.
மசால் வடை செய்ய மாவு தயாராக இருந்தால் அதில் சில பிரட் துண்டுகளை அரைத்து சேர்த்து வடை செய்தால் சுவையாக இருக்கும்.
பருப்பு வேகவைக்க மஞ்சள்தூளுடன் சிறிது நெய் கலந்து வேகவைக்க வாசனையாக இருக்கும்.
கேக் செய்யவதற்கு பாதாம் பருப்பு மற்றும் முந்திரி பருப்பை பாலில் ஊறவைத்து சேர்க்க கேக்கில் இருந்து உதிர்ந்து வராது.
கோதுமை மற்றும் கோதுமை மாவில் சிறிது கஸ்தூரி மேதியை கலந்து வைக்க நீண்ட நாட்களுக்கு வண்டுகள் பிடிக்காது.
சூடான எண்ணெயில் கடுகு சேர்த்து உடனே சிட்டிகை மஞ்சள்தூள் சேர்க்க கடுகு வெடித்து மேலே படாது.
கடலை எண்ணெயில் சிறிது புளியை போட்டுவைக்க நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
வெந்நீரில் கல் உப்பு, பேக்கிங் சோடா மற்றும் சோப்பு பவுடர் சேர்த்து கலந்து அகல் விளக்கை ஊறவைத்து தேய்த்தால் ஈசியாக சுத்தம் செய்து விடலாம்.
புளி சீக்கிரமாக கரைவதற்கு புளியை வெந்நீரில் ஊறவைக்க சீக்கிரம் கரைந்துவிடும்.
வெண்ணெய் காய்ச்சும்போது சிறிது முருங்கை இலையை போட்டுவைக்க நெய் வாசனை போகாமல் இருக்கும்.