இதை ட்ரை பண்ணா நீங்களும் ஹீரோயின் மாதிரி ஆகலாம்..!
உங்களை முகத்தை அழகாக வைத்துக் கொள்ள நிறைய பணத்தை செலவு செய்து கெமிக்கல் பொருட்களை முகத்திற்கு பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிமையாக பாதுகாக்கலாம், அவற்றை பற்றி என்னவென்று இப்போது இந்த பதிவில் பார்ப்போமா..
- முடி அடர்த்தியாகவும் பொடுகு பிரச்சனையும் நீங்கி பொலிவாக இருக்க பீட்ரூட் வேகவைத்த நீரை தலையில் தடவி மசாஜ் செய்து பின் ஊறவைத்து குளித்து வரலாம்.
- முகம் பளிச்சென்று இருக்க ஒரு ஸ்பூன் கடலை மாவில் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து கழுவி வரலாம்.
- சருமத்தின் நிறத்தை கூட்டுவதற்கு ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அதிமதுரம் பொடி, ஆவாரம் பூ பொடி, பச்சை பயிறு மாவு ஆகியவற்றை கலந்து தயிர் சிறிது சேர்த்து ஒன்றாக கலந்து முகத்தில் தடவி வரலாம்.
- முகத்தில் இருக்கும் பருக்கள் மறைய இரவில் குப்பைமேனி இலை, வேப்பிலை ஆகியவற்றை அரைத்து அதில் சிறிது கஸ்தூரி மஞ்சள் கலந்து முகத்தில் பூசி மறுநாள் காலையில் முகத்தை கழுவலாம்.
- சருமம் பளப்பாக மின்னுவதற்கு தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மாதுளம் பழத்தை சாப்பிட நல்ல மற்றம் தரும்.
- வெள்ளரி சாற்றுடன் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி காயவிட்டு கழுவி வருவதால் நன்றாக மென்மையாகவும் பருக்களும் மறையும்.
- இயற்கையாகவே சரும நிறத்தை அதிகரிக்க வாரத்திற்கு மூன்று முறை கேரட் ஜீஸ் குடிக்கலாம்.
- முகம் பளபளப்பாக மின்னுவதற்கு மாதுளை பழத்தில் இருந்து சாறு எடுத்து சிறிது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தேய்த்து காயவிட்டு கழுவலாம்.