சுர்மா பாக்கெட்டுகள் ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு 250 கிராம்
ரவை 75 கிராம்
நெய் 65 மிலி
ஓமம் 1 ஸ்பூன்
பாதாம் 30 மிலி
ஏலக்காய்த்தூள் 1 ஸ்பூன்
சர்க்கரை 75 கிராம்
நெய் 50 கிராம்.
செய்முறை:
ஒரு அகலமான பாத்திரத்தில் மாவினை கொட்டி அதில் ஓமம், தேவையான அளவு உப்பு மற்றும் நெய் 50 கிராம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ள வேண்டும்.
பிசைந்த மாவை அரை மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
பின் மாவை எடுத்து 1 ஸ்பூன் கோதுமை மாவு சேர்த்து பிசைந்து அதனை சமமாக சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்த்து சூடானதும் இதில் சில உருண்டைகளை நெய்யில் பொன்னிறமாக பொரித்து பின் ஆறவைத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் பாதாம் பொடி, ஏலக்காத்தூள், சர்க்கரை பவுடர் ஆகியவற்றை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
இந்த கலவையை உருண்டையின் உள்ளே வைத்து மூடி பாக்கெட்டுகள் போல செய்து கொள்ள வேண்டும்.
அதே நெய்யில் இந்த பாக்கெட்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் சுர்மா பாக்கெட்டுகள் தயார்.
ரொம்ப ஈசியாக செய்து விடலாம், கண்டிப்பா வீட்ல ட்ரை பண்ணி பாருங்க..
