“நாங்கள் போலீஸ் வந்திருக்கிறோம்..” கணவரின் கொலைக்கு பழி தீர்த்த மனைவி..!!
பொன்னேரியை அடுத்த மீஞ்சூரில் தனது கணவரின் கொலைக்கு பழித்தீர்க்க காவல்துறை வேடத்தில் சென்ற மனைவி, 3 பேரை வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த மீஞ்சூர் தோட்டக்காடு கிராமத்தை சேர்ந்த விஷ்ணு (மற்றும் அவருடைய சகோதரர் விஷால். இவர்கள் இருவரும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ஆவர்.
இவர்கள் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி பொன்னேரி பெரியகாவணம் பகுதியைச் சேர்ந்த 26 வயதாகும் லட்சுமணன் என்பவரை வெட்டிக் கொலை செய்ததாக காவல்துறையினர் விஷ்ணுவையும் விஷாலையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த மாதம் 29ஆம் தேதி நள்ளிரவு 5 பேர் கொண்ட கும்பல் தோட்டக்காடு கிராமத்தில் உள்ள விஷ்ணுவின் வீட்டிற்கு சென்று அங்கு அவருடைய தந்தை ரகு மற்றும் தாய் ஜெயபாரதி (வ42) மற்றும் விஷாலின் மனைவி அர்ச்சனா (வ21) ஆகியோரை பெட்ரோல் ஊற்றி மிரட்டிவிட்டு அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மூன்று பேரும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது தொடர்பாக மீஞ்சூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த விசாரணையில் கடந்த ஜூன் மாதம் நடந்த லட்சுமணம் கொலை வழக்கில் முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. விஷ்ணு காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்றுவிட்டதாக இறந்த லட்சுமணின் மனைவி ரம்யாவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து தனது கணவரின் கொலைக்கு பழிவாங்கும் எண்ணத்தில் உறவினர்களுடன் சேர்ந்து விஷ்ணு மற்றும் விஷால் வீட்டிற்கு ரம்யா கடந்த 29ஆம் தேதி நள்ளிரவு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கதவை திறந்த ரகு, “இந்த நேரத்தில் வந்திருக்கிறீர்களே யார் நீங்கள்” என கேட்டுள்ளார் அதற்கு தங்களை காவல்துறையினர் என கூறிய ரம்யா உள்ளிட்டோர் வீட்டிற்குள் புகுந்து விஷ்ணுவை தேடி உள்ளனர். அங்கு விஷ்ணு இல்லாததால் அங்கிருந்தவர்களை கொலை செய்யும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். மேலும் வீட்டில் இருந்த நகைகளையும் திருடிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் ரம்யா உள்ளிட்டோரை போலீஸார் தேடி வந்தனர். நேற்று முன் தினம் பொன்னேரி சின்னகாவணத்தைச் சேர்ந்த ரம்யா (வ24), வசந்த் (வ26), மணிகண்டன் (வ23), திருப்பதி (வ22), லட்சுமணனின் அண்ணன் மாறன்ராஜ் (வ29), ஜெயசாரதி வ(21) ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்து இன்னும் சில கூலிப்படையினரை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் கூறுகையில், இரவு 12 மணி இருக்கும்போது ஒரு 5, 6 பேர் கொண்ட கும்பல் அவர்கள் வீட்டு கதவை தட்டியதாக தெரிகிறது. அதன் பிறகு ரகு யாரென கேட்ட போது “நாங்கள் போலீஸ் வந்திருக்கிறோம், விஷ்ணு சிறையில் இருந்து தப்பியதால் அவரை தேடி வந்திருக்கிறோம்” எண்று சொன்ன பிறகே அவர்கள் கதவை திறந்ததனர். உடனே உள்ளே நுழைந்த அந்த கும்பல் அங்கு விஷ்ணு இல்லாததால் அங்கிருந்த மூன்று பேரையும் வெட்டினர்.
இதனை அடுத்து அவர்கள் மூவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். அந்த சத்தம் கேட்டு நாங்கள் எல்லாரும் வெளியே வந்து பார்த்த போது அந்த கும்பல், எங்களை பார்த்தவுடன் தப்பியோடிவிட்டனர். பிறகு அவர்கள் மூவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தோம் என அவர்கள் கூறினர்…
– சத்யா.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..