லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்ற கொத்தமல்லி புதினா சாதம்…!
பாஸ்மதி அரிசி
பட்டை,கிராம்பு,ஏலக்காய்,அன்னாசி பூ,பிரியாணி இலை
வெங்காயம்
பச்சை மிளகாய்
கேரட்
பீன்ஸ்
பச்சை பட்டாணி
மஞ்சள் தூள்
உப்பு
நெய்
எண்ணெய்
கொத்தமல்லி இலை
புதினா இலை
சின்ன வெங்காயம்
பூண்டு
இஞ்சி
பச்சை மிளகாய்
தேங்காய் துண்டு
தண்ணீர்
செய்முறை:
பாஸ்மதி அரிசி சுத்தம் செய்து கழுவி 20 நிமிடங்களுக்கு நீரில் ஊற வைக்கவும்.
மிக்ஸியில் விழுது அரைக்க கொடுக்கப்பட்டுள்ளதை போட்டு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் நெய்,எண்ணெய் விட்டு பட்டை,கிராம்பு,ஏலக்காய்,அன்னாசி பூ,பிரியாணி இலை சேர்த்து வறுத்து அத்துடன் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் கேரட்,பீன்ஸ், பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
பின் அரிசியை போட்டு வேகவைத்து இறக்கவும்.
கடைசியாக வறுத்த முந்திரி தூவி விடலாம்.
