முட்டை இப்படி செய்து பாருங்க..! செம டேஸ்ட்..!
வேக வைத்த முட்டை – 5
சோளமாவு
எண்ணெய்
இஞ்சி
பூண்டு
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 1
மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
சோயா சாஸ் – 1 ஸ்பூன்
சில்லி சாஸ் – 2 ஸ்பூன்
தக்காளி சாஸ் – 2 ஸ்பூன்
வெங்காயத்தாள் நறுக்கியது
வேகவைத்த முட்டையை வட்டமாக வெட்டி அதன் மேல் இரண்டு பக்கமும் சோள மாவை தடவ வேண்டும்.
அடுப்பில் வாணலை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பூண்டு,இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
அதில் உப்பு,மிளகுதூள்,மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும்.
பின் சோயா சாஸ், தக்காளி சாஸ் மற்றும் சில்லி சாஸ் சேர்த்து கலந்து வெங்காயத்தாள் சேர்த்து கலக்கவும்.
கடைசியாக வறுத்த முட்டை சேர்த்து மெதுவாக கலந்து விட்டு அடுப்பை ஆப் செய்யவும்.