வீட்டில் அவல் இருந்தால் போதும் ஈசியா காலை உணவு செய்யலாம்..
தேவையான பொருட்கள் :
- அவல் – 1 கப்
- பச்சரிசி மாவு – 1/4 கப்
- ஊறவைத்த பாசி பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
- வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- பச்சைமிளகாய் – 3 (நறுக்கியது)
- இஞ்சி – ஒரு துண்டு (பொடியாக நறுக்கியது)
- தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
- கருவேப்பிலை, கொத்தமல்லி இலை – தேவையான அளவு (நறுக்கியது)
- சீரகம் – 1 டீஸ்பூன்
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – சிறிதளவு
செய்முறை:
ஒரு கப் அவல் எடுத்துக் கொண்டு அதனை நீரில் நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும்.
நீரை நன்றாக வடித்து அதனை ஐந்து நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும்.
பின் அவலை பார்த்தால் நல்லா சாஃப்டாக மாறி இருக்கும்.
அதை அப்படியே இதனை கைகளால் மசித்துக் கொள்ள வேண்டும்.
பின் பச்சரிசி மாவு கால் கப், பாசிப்பருப்பு 2 ஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கியது, தயிர் 2 ஸ்பூன், வெங்காயம் நறுக்கியது, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, நறுக்கிய தேங்காய், சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதில் தேவையான அளவு நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
இந்த மாவை சப்பாத்தி மாவு உருண்டைக்கு சற்று பெரிதாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாழை இலையில் சிறிது எண்ணெய் தடவி உருண்டையை வைத்து மெல்லியதாக தட்டிக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவி இந்த தட்டிய மாவை சேர்த்து சுற்றி நல்லெண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்க வேண்டும்.
அவ்வளவு தான் ஈசியா டக்குனு காலை உணவு தயார்.