காரசாரமான உருளைக்கிழங்கு வறுவல்..!
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு அரை கிலோ
உப்பு தேவையானது
மஞ்சள்தூள் அரை ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
கொத்தமல்லி தூள் 1 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் 1 ஸ்பூன்
சீரகத்தூள் 1 1/2 ஸ்பூன்
ஆம்சூர் தூள் 1 1/2 ஸ்பூன்
எண்ணெய் தேவையானது
செய்முறை:
உருளைக்கிழங்கின் தோலை உரித்துக் கொள்ள வேண்டும்.
உருளைக்கிழங்கை 1 செ.மீ அளவிற்கு தடிமனாக வட்ட வடிவில் வெட்டிக் கொள்ள வேண்டும்.
உப்பு கலந்த நீரில் அதனை போட்டு அலசி பின் ஒரு துணியில் போட்டு நீரை உலர வைக்கவும்.
ஒரு ஃபேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உலர்ந்த உருளைக்கிழங்கை போட்டு 90 சதவீதம் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை ஒவ்வொரு துண்டுகளாக லேசாக மத்தால் மசித்துக் கொள்ள வேண்டும்.
மசித்தவற்றை மீண்டும் ஒரு முறை பொரித்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள மசாலா வகைகள் மற்றும் உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்து பின் அந்த மசாலாவில் பொரித்த உருளைக்கிழங்குகளை சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் காரசாரமான உருளைக்கிழங்கு வறுவல் தயார்.