டேஸ்டியான மலாய் வெந்தயக்கீரை பட்டாணி கறி..!
நெய் 1 ஸ்பூன்
எண்ணெய் 1 ஸ்பூன்
பட்டை,கிராம்பு,ஏலக்காய்
சீரகம் அரை ஸ்பூன்
பூண்டு 8 பற்கள்
இஞ்சி 1 துண்டு
பச்சை மிளகாய் 5 நறுக்கியது
முந்திரி 8
வெங்காயம் 3 நறுக்கியது
தண்ணீர்
வெண்ணெய்
நெய் 1 ஸ்பூன்
வெந்தயக்கீரை ஒரு கைப்பிடி
வேகவைத்த பட்டானி 1 கப்
அரைத்த மசாலா விழுது
உப்பு தேவையானது
தண்ணீர் கால் கப்
பிரெஷ் கிரீம் அரை கப்
கசூரி மேத்தி சிறிது
ஒரு வாணலில் எண்ணெய்,நெய் சேர்த்து பட்டை,கிராம்பு,ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் நறுக்கிய பூண்டு,இஞ்சி,மிளகாய்,முந்திரி,வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து வெந்தயக்கீரை போட்டு வதக்க வேண்டும்.
அத்துடன் வேகவைத்த பட்டாணி வதக்கி தனியே எடுத்துக் கொள்ளவும்.
வாணலில் நெய் சேர்த்து அரைத்த மசாலா விழுதை சேர்த்து வதக்க வேண்டும்.அதில் உப்பு,நீர் சேர்த்து கலக்கவும்.
வதக்கி வைத்துள்ள வந்தயக்கீரை மற்றும் பட்டானி சேர்த்து கலந்து, பிரஷ் கிரீம் சேர்த்து கலந்து, ஒரு ஐந்து நிமிடத்திற்கு வேகவைத்து கடைசியாக கசூரி மேத்தி தூவி இறக்கவும்.
அவ்வளவுதான் சுவையான மலாய் வெந்தயக்கீரை பட்டாணி கறி தயார்.