தித்திப்பான வெள்ளை எள்ளு லட்டு..! ஈவினிங் ஸ்நாக்…!
தேவையான பொருட்கள்:
வெள்ளை எள்ளு 1 கப்
வேர்க்கடலை அரை கப் வறுத்தது
கொப்பரை தேங்காய் முக்கால் கப் துருவியது
வெல்லம் முக்கால் கப் துருவியது
நெய்
செய்முறை:
ஒரு வாணலில் எள்ளு போட்டு பொன்னிறமாக மிதமான தீயில் வறுத்து எடுக்கவும்.
பின் வறுத்த வேர்க்கடலையை போட்டு சிறிது வறுக்கவும்.
கொப்பரை தேங்காயை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
பின் அனைத்தையும் ஆறவிட்டு ஒரு மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
அத்துடன் கொப்பரை தேங்காய்,வெல்லம்,ஏலக்காய் சேர்த்து அரைக்கவும்.
அதனை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி சிறிது சிறிதாக நெய் சேர்த்து உருண்டைகளாக பிடிக்கவும்.
அவ்வளவுதான தித்திப்பான ஆரோக்கியம் நிறைந்த எள்ளு லட்டு தயார்.