சின்ன வெங்காய ஊறுகாய்..!
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் கால் கிலோ
மிளகாய்த்தூள் 50 கிராம்
நல்லெண்ணெய் 150 கிராம்
கடுகு பொடி 1 ஸ்பூன்
வெந்தயப்பொடி 1 ஸ்பூன்
புளி எலுமிச்சை அளவு
உப்பு தேவையானது
பெருங்காயத்தூள் கால் ஸ்பூன்
செய்முறை:
முதலில் சின்ன வெங்காயத்தை சுத்தம் செய்து உலர வைக்கவும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து பின் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் மிளகாய்த்தூள், உப்பு, கடுகுப்பொடி, வெந்தயப்பொடி மற்றும் புளிக்கரைசல் சேர்த்து வதக்கி கொதிக்க வைக்கவும்.
இது நன்றாக சுண்டி எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
அவ்வளவுதான் கமகமனு சின்ன வெங்காய ஊறுகாய் தயார்.